உலக தைராய்டு தினம்
உலக தைராய்டு தினம் 1 தைராய்டு என்பது ஒரு சிறிய சுரப்பு. வண்ணப்பூச்சி வடிவில் இருக்கும். இது கழுத்தின் கீழ்ப்பகுதியின் மையத்தில் அமைந்திருக்கும். உடலில் ஏற்படும் வளர்சிறை மாற்றங்களைக் கட்டுப்படுத்த இந்த தைராய்டு சுரப்பி, தைராய்டு என்ற ஹார்மோனை உற்பத்தி செய்கிறது. இது உடலில் உள்ள திசுக்கள், செல்கள், மூளை இதயம் போன்றவை இயங்குவதற்கு உதவியாக இருக்கிறது. இந்நோய் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, மே 25ம் தேதி உலக தைராய்டு தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலக அளவில் ஆண்களை விட, பெண்கள் தான், இந்நோயினால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இளம் பெண்களும் பாதிக்கப்படுகின்றனர். தைராய்டு நோய்களை, தைராய்டு குறைநிலை நோய், மிகைநிலை நோய், கழுத்து கழலை நோய் மற்றும் தைராய்டு புற்றுநோய் என நான்கு வகையாக பிரிக்கலாம்.இந்தியாவில் பத்து இளைஞர்களில் ஒருவர் ஹைப்போ தைராய்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்